பத்திரமா இருங்க கேரள மக்களே.. கேரள மக்களுக்கு ராகுல் காந்தி ட்விட்

Kerala rahulgandhi Rising cases Coronavirus
By Irumporai Jul 30, 2021 12:12 PM GMT
Report

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2 ம் அலை குறைந்து வரும் நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று அதிகரித்து வருவதால், கேரளாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்:

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளித்து வருகிறது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டுதலையும் கேரள மக்கள் பின்பற்றுமாறு கேரளாவில் உள்ள சகோதர, சகோதரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.