பிகினியில் வெளிநாட்டு பக்தர்கள் - ரிஷிகேஷ்-ஐ கோவா ஆக மாற்றி வருவதாக சர்ச்சை!
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிகினி உடையில் சென்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கங்கை நதி
உத்தரகண்ட்டில் அமைந்துள்ள ரிஷிகேஷ் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு கங்கை நதியில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர்.
இந்நிலையில், 'புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றியதற்காக pushkardhamiக்கு நன்றி' என்ற கேப்ஷனுடன் எக்ஸ் வலை தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இதுதான் இப்போது ரிஷிகேஷில் நடக்கிறது.
வெடித்த சர்ச்சை
விரைவில் அது ஒரு மினி பாங்காக் ஆகிவிடும். ரிஷிகேஷ் இனி மதம், ஆன்மீகம் மற்றும் யோகாவின் நகரம் அல்ல. அது கோவாவாக மாறிவிட்டது.
இது போன்ற கலசாச்சாரம் எவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.