நடிகையுடன் கள்ளத்தொடர்பு - மகனுடன் வெளியேறிய பிரபல நடிகரின் மனைவி
நடிகர் ராஜ்கபூருக்கும், நடிகை வைஜெயந்திமாலாவுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அவரது மகன் நடிகர் ரிஷிகபூர் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் Khullam Khulla: Rishi Kapoor Uncensored என்கிற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டிருந்தார். அந்த புத்தகத்தில் தன் தந்தையான நடிகர் ராஜ் கபூர் பற்றி அவர் தெரிவித்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதில் அப்பா ராஜ் கபூருக்கும், நடிகை வைஜெயந்திமாலாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக ரிஷிகபூர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதையறிந்த நானும், அம்மா கிருஷ்ணாவும் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கினோம்.வைஜெயந்திமாலாவுடனான தொடர்பை அப்பா துண்டிக்கும்வரை நாங்கள் வீட்டிற்கு வரவில்லை எனவும் ரிஷிகபூர் கூறியுள்ளார்.
என் அப்பா உயிருடன் இல்லை என்பதால் பப்ளிசிட்டிக்காக என் தந்தை அந்த காதல் கதையை உருவாக்கியதாக வைஜெயந்திமாலா கூறியதை தன்னால் ஏற்க முடியவில்லை என தெரிவித்துள்ள அவர், தந்தை உயிருடன் இருந்திருந்தால் அந்த கள்ளத்தொடர்பை வைஜெயந்திமாலா மறுத்திருக்கவோ, அவரை பப்ளிசிட்டி பிரியர் என்றோ சொல்லியிருக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.