கெத்தா, மாஸா நடந்து வந்து பதவியேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக் - வைரலாகும் வீடியோ - குவியும் வாழ்த்து...!

Rishi Sunak England King Charles III
By Nandhini Oct 25, 2022 11:39 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சமூகவலைத்தளங்களில், கெத்தா, மாஸா நடந்து வந்து பதவியேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனகின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய வம்சாவளி ரிஷி சுனக்

3ம் சார்லஸ் மன்னரால் புதிய பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 6 ஆண்டுகளில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5வது கன்சர்வேடிவ் கட்சித் தலைவராவார். பிரித்தானியப் பிரதமராக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார்.

கடந்த மாதம், ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் லிஸ் ட்ரஸிடம் தோல்வியடைந்தார். இதயைடுத்து, லிஸ் ட்ரஸ் இங்கிலாந்து பிரதமராக முறையாகப் பொறுப்பேற்றார். இருப்பினும், டிரஸ் நாட்டைப் பீடித்துள்ள நெருக்கடியை விரைவாகக் கையாள முடியவில்லை. இதனால், 45 நாட்களே ஆட்சியில் இருந்த அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து மன்னர் 3ம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் 3ம் சார்லசை இன்று சந்தித்துப்பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.

இதனையடுத்து, 3ம் சார்லஸ் மன்னரால் புதிய பிரிட்டிஷ் பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார்.

rishi-sunak-world-england

மாஸா நடந்து வந்த வைரல் வீடியோ

இந்நிலையில், அந்த வீடியோவில், முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கெத்தா, மாஸா நடந்து வந்து பிரிட்டிஷ் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரிஷி சுனக்கிற்கு இந்தியா உட்பட உலக நாடுகள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.