மன்னர் சார்லஸ் ஒப்புதலை அடுத்து பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றார் ரிஷி சுனக்

Rishi Sunak England King Charles III
By Thahir Oct 25, 2022 11:02 AM GMT
Report

பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஒப்புதலையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றார் ரிஷி சுனக்.

ரிஷி சுனக் பதவியேற்றார்

பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த வந்த லிஸ் டிரஸ் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய ஆட்சியை அமைக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார்.

மன்னர் சார்லஸ் ஒப்புதலை அடுத்து பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றார் ரிஷி சுனக் | Rishi Sunak Took Over As Prime Minister Of Britain

இதை தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையில் மன்னர் சார்லஸை ரிஷி சுனக் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பொறுப்பேற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.