6 வாரத்தில் 5 லட்சம் பவுண்டு செலவு - வரி பணத்தில் ஆட்டம் போடும் ரிஷி சுனக்

Rishi Sunak England
By Sumathi Apr 01, 2023 06:17 AM GMT
Report

6 வாரத்தில் ரிஷி சுனக் விமான பயணத்திற்காக 5 லட்சம் பவுண்டுகள் செலவு செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்று வந்துள்ளார். இதில், பாலி பயணத்தின் போது தம்முடன் 35 அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார் ரிஷி சுனக்.

6 வாரத்தில் 5 லட்சம் பவுண்டு செலவு - வரி பணத்தில் ஆட்டம் போடும் ரிஷி சுனக் | Rishi Sunak Jets Shocking Waste Taxpayers

அவருடன் சென்ற ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் சொந்த செலவில் பாலி சென்றுள்ளனர். அதற்கான விமான செலவு 341,857 பவுண்டுகள் எனவும், பிரதமரின் தனிப்பட்ட செலவு 11,204 பவுண்டுகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீண் செலவு

தனியார் விமானம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் முன்பதிவு செய்திருந்தாலும், அது அரசாங்க விமானம் போன்றே கொடி பொறிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரிப்பணத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே

ரிஷி சுனக் மீது கடும் விமர்சனம் எழுந்தபோது அவர் அதனை பெருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.