கிரிக்கெட் போட்டியை காண ஸ்டேடியத்திற்கு வந்த ஊர்வசி - கலாய்த்து தள்ளும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

Viral Video Rishabh Pant Urvashi Rautela
By Nandhini Aug 29, 2022 09:30 AM GMT
Report

நேற்று நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் ஆசிய கிரிக்கெட் போட்டியை காண ஸ்டேடியத்திற்கு வந்த நடிகை ஊர்வசியை தற்போது சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர். 

தி லெஜண்ட்

சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள படம் “தி லெஜண்ட்”. இப்படத்தில், ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த 28ம் தேதி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும், உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. பாக்ஸ் ஆபீஸ் நல்ல வசூலை அள்ளியது.

நடிகை ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை

நடிகை ஊர்வசியும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் காதலித்ததாக முன்பு கிசுகிசுக்கப்பட்டனர். சமீபத்தில் நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசுகையில், மிஸ்டர் ஆர்.பி. டெல்லியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் எனக்காக இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தார் என்று கூறியதால் இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டார்கள். பண்ட்டை தம்பி என்று ஊர்வசி சொல்ல, பதிலுக்கு அவர் தங்கச்சி என்று சொல்ல இவர்களின் இரண்டு பேரின் சண்டை வேற லெவலுக்குச் சென்றது.

Urvashi Rautela - Rishabh Pant

கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியை காண நடிகை ஊர்வசி ஸ்டேடியத்திற்கு வந்தார்.

இதைப் பார்த்ததும் மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.