பண்ட் வலியில்... - பாக். வீரர் பக்கம் திரும்பிய முன்னாள் காதலி ஊர்வசி ரவுத்தேலா.. - வைரலாகும் பதிவு..!
தி லெஜண்ட்
சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள படம் “தி லெஜண்ட்”. இப்படத்தில், ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்தார். இப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும், உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த ஆண்டு வெளியானது.
நடிகை ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை
நடிகை ஊர்வசியும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் காதலித்து வருவதாக முன்பு கிசுகிசுக்கப்பட்டனர்.
சமீபத்தில் நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசுகையில்,
மிஸ்டர் ஆர்.பி. டெல்லியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் எனக்காக இரவு முழுவதும் காத்துக் கொண்டிருந்தார் என்று கூறியதால் இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டனர். பண்ட்டை தம்பி என்று ஊர்வசி சொல்ல, பதிலுக்கு அவர் தங்கச்சி என்று சொல்ல இவர்களின் இரண்டு பேரின் சண்டை வேற லெவலுக்குச் சென்றது.
பாக்.வீரர் நசீம் ஷாவு பக்கம் திரும்பிய ஊர்வசி
இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார்.
பாகிஸ்தானில் இருக்கும் அவருக்காக இந்தியாவிலிருந்து ஊர்வசி பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். அதுவும் அவரது பிறந்தநாளுக்கு 3 மணி நேரம் முன்பே இவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு சரியாக ஒரு நாள் கழித்து நசீம் ஷாவும் வெளிப்படையாக நன்றி ஊர்வசி என்று பதிலளித்துள்ளார்.
தற்போது இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில், கவனத்தை பெற்றுள்ளது. ரிஷப் ரெஸ்ட்டில் இருக்கிறாரே... அதான் ஊர்வசி காற்று பாக்.பக்கம் திரும்பியிருக்கிறது போல என்று ரசிகர்கள் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் 10 நாட்களுக்கு முன்பு நசீம் ஷாவுக்கு கவுரவ டிஎஸ்பி பதவி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.