அந்த 2 வீரர்களும் டாப்பில் இருப்பாங்க; கோலி, பும்ரா இல்ல - பாண்டிங் கணிப்பு!

Rishabh Pant Indian Cricket Team Steven Smith
By Sumathi Nov 06, 2024 09:00 AM GMT
Report

அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியல் குறித்து ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

அதிக ரன்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

smith - rishabh pant

19 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் அனுபவ வீரர் முகமது ஷமி மட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார். இளம் வீரர்களான ஹர்சித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், இந்திய அணியால் நிச்சயம் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். மிகச்சிறந்த பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கிறார்கள். அதேபோல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால், நிச்சயம் ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும்.

கேப்டன்சியை இந்த வீரரிடம் கொடுத்துட்டு கிளம்புங்க ரோஹித் - கொந்தளித்த கவாஸ்கர்

கேப்டன்சியை இந்த வீரரிடம் கொடுத்துட்டு கிளம்புங்க ரோஹித் - கொந்தளித்த கவாஸ்கர்

பாண்டிங் கணிப்பு

இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி கூடுதல் அனுபவத்துடன் இருக்கிறது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவதும் எளிதானதல்ல. அதனால் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் நிச்சயம் வெல்லும். இரு வீரர்கள் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.

rikki ponting

ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் இருவரும் தான். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தனது பழைய பேட்டிங் வரிசையான நம்பர் 4க்கு செல்லவுள்ளார். அதனால் அவரின் பேட்டில் இருந்து அதிக ரன்கள் வரும். இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் நம்பர் 5ல் களமிறங்கவுள்ளார். அவரின் ஃபார்முக்கு பழைய பந்து கிடைத்தால், என்ன நடக்கும் என்பது தெரியும்.

அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை மிட்சல் ஸ்டார்க் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் ஹேசல்வுட் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நினைக்கிறேன். அதேபோல் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் ஹேசல்வுட் இருக்கிறார். பேட் கம்மின்ஸ், பும்ராவை காட்டிலும் ஹேசல்வுட் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் எனத் தெரிவித்துள்ளார்.