இந்திய அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Covid positive Rishabh pant
By Petchi Avudaiappan Jul 15, 2021 12:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்து தொடருக்கு சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு பிறகு இங்கிலாந்தின் தங்கியுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்திய அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Rishabh Pant Staff Member Tests Covid Positive

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட் என கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா அளித்துள்ள பேட்டி ஒன்றில், 2 வீரர்களில் ஒருவர் கடந்த எட்டு நாள்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயரைச் தெரிவிக்க முடியாது எனக் அவர் கூறியுள்ளார்.