இனி அது நடக்காது... ரிஷப் பண்ட் குறித்து கங்குலி சொன்ன அதிர்ச்சி தகவல்.... - ஷாக்கான ரசிகர்கள்...!
ரிஷப் பண்ட் குறித்து பிசிசிஐயின் முன்னாள் தலைவர் கங்குலி சொன்ன தகவலால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தன் தாயாரைப் பார்க்க ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்த போது, 24 வயதாகும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரிஷப்பிற்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரிஷப்பண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பறிபோன வாய்ப்புகள்
இதனையடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடமாட்டார் என்றும், ரிஷப் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியானது. மேலும், கார் விபத்தால் ரிஷப், அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கங்குலி சொன்ன அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், டெல்லி அணியின் முக்கிய பொறுப்பில் உள்ள கங்குலி ஒரு அதிர்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ரிஷப் பண்ட் தற்போது நலமுடன் இருந்தாலும் அவர் பூரண குணமடைய இன்னும் ஒரு ஆண்டு நீடிக்கும். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இந்திய அணிக்கு திரும்ப கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.
கங்குலி தெரிவித்துள்ள இந்த தகவல், ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை உலகக்கோப்பை தொடருக்கு எதிர்பார்த்த நிலையில் தற்போது அது நடக்காது என்று தெரிய வந்துள்ளதால் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.