ஒற்றை கையால் அசால்ட்டாக சிக்ஸ் அடித்த ரிஷப் பண்ட் - மிரண்டு போன கிரிக்கெட் ரசிகர்கள்

viratkohli rohitsharma rishabhpant INDvWI jasonholder
By Petchi Avudaiappan Feb 18, 2022 04:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் சிக்ஸ் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் தலா 52 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 33 ரன்கள் எடுத்தனர். 

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் பேட் செய்த போது ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தை அசால்ட்டாக ஒற்றை கையில் சிக்ஸ் அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அசர வைத்தார். இந்த ஷாட்டை பார்த்து எதிர்முனையில் இருந்த வெங்கடேஷ் ஐயரும், பெவிலியனில் இருந்த ரோகித் சர்மாவும் அசந்து போய் கைத்தட்டினர்.

அவரின் அந்த ஷாட் முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனியில் ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட்டைப் போல இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.