மேட்ச் வேண்டாம் , நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கள் : கங்குலி அட்வைஸ்
ரிஷப் பந்த் முழுமையாக குணமடைவதற்கு, அதிக நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
கார் விபத்து
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். தலைநகர் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கங்குலி அறிவுரை
இந்த நிலயில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராகவும் இருக்கும் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ரிஷப் பந்த்தை தேசிய அணி நிச்சயமாக இழந்துள்ளது. அவரது வெற்றிடம் நிரப்ப முடியாதது. மிகவும் இளமையான, அதே நேரம் திறமை மிக்க ஆட்டக்காரரான பந்த் காயத்திலிருந்து குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர் சரியான முறையில் குணமடைவதற்கு போதுமான நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்