அவுட்டான கோபத்தில் ரிஷப் பண்ட் செய்த காரியம் - ரசிகர்கள் அதிர்ச்சி

Petchi Avudaiappan
in விளையாட்டுReport this article
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட செய்த காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களுடனும், டேர்டூசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 2 நாள் ஆட்டம் மீதமிருக்க தென்னாப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக தென்னாப்பிரிக்க வீரர்கள், ஒரு யுத்தியை கையாண்டனர். ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்த ஷாட் பால் வீசப்பட்டது.
இதனால் கடுப்பான ரிஷப் பண்ட், அடுத்த பாலை இறங்கி வந்து தேவையில்லாத ஷாட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சிக்கியது.இதனால் ரிஷப் பண்ட் டக் அவுட்டாக, தென்னாப்பிரிக்க வீரர்கள் அவரை கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், டிரெஸிங் ரூம்க்கு செல்லும் வகையில் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருந்த கம்பியை பேட்டால் ஓங்கி அடித்தார்.
பண்டின் இந்த நடவடிக்கையால் அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. மேலும் பெவிலியன் செல்வதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரரை ரிஷப் திட்டியதாகவும் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.