உன்னால் முடியும் தோழா...எழுந்து வா...தன்னம்பிக்கையுடன் நடைபயிற்சி மேற்கொண்ட ரிஷப் பண்ட்

Rishabh Pant Indian Cricket Team Viral Photos
By Thahir Feb 11, 2023 06:08 AM GMT
Report

கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கிரிக்கெட் வீரர் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விபத்தில் சிக்கி  படுகாயம் 

இந்திய கிரிக்கெட் வீரர், 25 வயதான ரிஷப் பந்த் கடந்த டிசம்பரில் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது சொந்த ஊருக்கு தனியாக காரில் சென்றபோது பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார்.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் அவரது கார் கவிழ்ந்து தீப்பிடித்தது, ஆனால் பந்த் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

முதலில் மேக்ஸ் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் பிசிசிஐயின் வேண்டுகோளின் பேரில், அறுவை சிகிச்சைக்காக அவர் ஜனவரி 4 ஆம் தேதி மும்பையின் கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, ரிஷப் பந்த் கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவரது வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம் 

மேலும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார், அவர் குணமடைய மருத்துவர்கள் பந்த்திற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அதன்படி மருத்துவர்கள் சில தினங்களில் அவரை மீண்டும் மதிப்பீடு செய்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பந்த், ஊன்றுகோல் உதவியுடன் அவர் மீண்டும் நடப்பது போன்ற இரண்டு படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

Rishabh Pant on a walk

அவர் தனது பதிவில் ஒரு படி சிறந்ததாகவும், வலிமையாகவும் முன்னேற வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.