ரிஷப் 24 கேரட் கோல்ட்...அடுத்த கேப்டன் அவர் தான் - புகழும் பிரபலம்!!

Rishabh Pant Indian Cricket Team Board of Control for Cricket in India
By Karthick Dec 06, 2023 04:57 AM GMT
Report

விபத்தில் சிக்கி அணியில் இருந்து விலகி இருக்கும் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் இன்னும் அணிக்கு திரும்பாமல் உள்ளார்.

இந்திய அணி

உலகக் கோப்பையில் இறுதி போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியது. அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

rishabh-pant-is-the-next-test-captain-akash-chopra

இதனை தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளது. டி 20 போட்டிக்கு சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்கள்.

24 கேரட் கோல்ட்

இச்சூழலில், டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு பிறகு டெஸ்ட் அணியை யார் வழிநடத்துவார்? என்ற கேள்வி எழும் நிலையில், அதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “மிகவும் நீண்ட கால நோக்கம் எடுத்து கொண்டால் சுப்மன் கில் சரியானவராக இருப்பார், ஆனால் தற்போதைக்கு அவர் டெஸ்ட் கேப்டனாக பொருந்தமாட்டார் என்றார்.

rishabh-pant-is-the-next-test-captain-akash-chopra

எனவே, அந்த பதவிக்கு ரிஷப் பண்ட் சரியானவராக இருக்கலாம் என்ற ஆகாஷ் சோப்ரா , டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 24 காரட் தங்கம் என புகழாரம் சூட்டி, அவர் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவிக்கு போட்டியிடும் வீரர்களில் ஒருவராக இருப்பார் என தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேம் சேஞ்சராக இருக்கிறார் என்று பாராட்டிய ஆகாஷ் சோப்ரா, ரோகித் சர்மா விடை பெற்றால் இந்த இருவரில் ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.