”உன்ன அடுத்த தோனின்னு நினைச்சனே” - ரிஷப் பண்டை நினைத்து புலம்பும் முன்னாள் வீரர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹபத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதில் முதல் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 17 ரன்கள் அடித்து மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எப்பொழுதும் அதிரடியாக செயல்படும் ரிஷப் பண்ட் சமீப காலமாக அதிரடியாக விளையாடுவதில் சற்று தடுமாறி வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் ரிஷப் பண்டின் மந்தமான ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில், ரிஷப் பண்ட் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக சிறந்த முறையில் விளையாடி அசத்தினார்,குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து எதிரான தொடர்களில் அதிரடியாக விளையாடி அனைவரையும் வியக்க வைத்தார்.
ஆனால் அவர் இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் மோசமாக விளையாடினார், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ரிஷப் பண்ட் முன்பைப் போல் சிறப்பாக விளையாடவில்லை நான் அவரை தோனி போன்று அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன் . ரிஷப் பண்ட் என் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று இன்சமாம் என தெரிவித்துள்ளார்.