காயம் அடைந்தது போல் நடித்த ரிஷப் பண்ட்? இங்.வீரர் சர்ச்சை பேச்சு!
பந்து காலில் தாக்கி ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் காயம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் ரிஷப் பண்ட் பேட்டிக் செய்து கொண்டிருந்தபோது, பந்து காலில் தாக்கி அவருக்கு காயம் ஏற்பட்டது.
உடனே போட்டியிலிருந்து விலகிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 6 வாரம் வரை ஓய்வில் இருந்தார். இந்நிலையில், ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்து சதம் கடந்தார். இதன்மூலம் இந்திய அணி 350 ரன்கள் கடந்தது. தற்போது இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லயார்ட், ”நான் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். ஒருமுறை ஆண்டி ரோபட்ஸ் பந்து வீச்சில் என்னுடைய தாவ கட்டை உடைந்தது.
டேவிட் லயார்ட் கருத்து
என்னால்பேட்டிங் செய்யவே முடியவில்லை. ஒருமுறை கைவிரல் உடைந்த நிலையில் நான் பேட்டிங் செய்தது நினைவுக்கு வருகிறது. ரிஷப் பண்டும் வலியால் அவதிப்பட்டார் என்று நினைக்கின்றேன். எனினும் அதையும் மீறி அவர் களத்திற்கு வந்து விளையாடினார்.
ஆனால் சிலர் பண்ட் விளையாடியதை கிண்டல் செய்தார்கள். இந்த காயத்தை அவர் நன்றாக அவருக்கு சாதகமாக பயன்படுத்தி ரசிகர்கள் ஆதரவை தேடுகிறார் என்றும் அவருடைய காயம் பெரிய அளவு இருந்திருக்காது என்றும் கூறினார்கள்.
மேலும் சிலர் அவர் மாடிப்படியில் இருந்து மெதுவாக இறங்கி வந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி அவர் களத்திற்கு வந்ததால் அவருக்கு டைம் அவுட் வழங்கி இருக்க வேண்டும் என்றும் சிலர் பேசினார்கள். இதேபோன்று ரன் ஓட முடியவில்லை என்பதற்காக ரன்னர்களை வைக்கும் முறைக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் ஒரு வீரருக்கு வெளியில் தெரியும் அளவுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் அவருக்கு ஓய்வு வழங்கிவிட்டு அவரைப் போன்ற மாற்று வீரர்கள் அணியில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.