'களத்தில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்' - ரிஷப் பண்ட் டுவிட்

Cricket Rishabh Pant Indian Cricket Team
By Nandhini Jan 17, 2023 07:35 AM GMT
Report

'களத்தில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்' என்று விபத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டுவிட் செய்துள்ளார். 

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

கடந்த மாதம் டிசம்பர் 30ம் தேதி தன் தாயாரைப் பார்க்க ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்த போது, 24 வயதாகும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் ​​பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பிற்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால் தசைநார் கிழிந்த இரு பகுதியை சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அடுத்த 6 வாரத்தில் இன்னொரு தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.

rishabh-pant-indian-cricketer-twitter

ரிஷப் பண்ட் டுவிட்

இந்நிலையில், விபத்துக்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'நான் சீக்கிரம் குணமடைய வேண்டி விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், ஆதரவாக இருந்தவர்களுக்கும் பணிவோடு நன்றி கடன்பட்டுள்ளேன். எனக்கு நடந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டது. எனக்கு முன்பாக உள்ள சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி. உங்களின் அன்பான வார்த்தைகள், ஊக்குவித்தலுக்காக ரசிகர்கள், சக வீரர்கள், டாக்டர்கள் ஆகியோருக்கும் இதயபூர்வமான நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.