கொல்கத்தா போட்டியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரிஷப் பண்ட் ... என்ன நடந்தது?
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிதிஷ் ராணா 57, ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்கள் விளாசினர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும் , ரகுமான் 3 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர்.

தொடர்ந்து பேட் செய்த டெல்லி அணியில் டேவிட் வார்னர் 42, பவெல் 33, அக்ஸர் படேல் 23 ரன்கள் எடுக்க 19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே இன்றைய போட்டியை ரிஷப் பண்டின் சகோதரி சாக்ஷி பண்ட் மற்றும் காதலி ஈஷா நேகி ஆகிய இருவருமே பார்வையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்து கண்டு ரசித்தனர். ரிஷப் பண்ட் - இஷா நேகி ஜோடி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதனை 2019 ஆம் ஆண்டு பண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பண்டிற்கு கடினமான சூழல்கள் ஏற்படும் போதெல்லாம் இஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு நம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும் வகையில் பதிவுகளை போடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.