ரிஷப் பந்த் ஐபிஎல் 2023ல் விளையாடுவாரா? சவுரவ் கங்குலி கொடுத்த அப்டேட்... - கவலையில் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023ல் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு சவுரவ் கங்குலி பதிலளித்து பேசியுள்ளார்.
சவுரவ் கங்குலி கொடுத்த அப்டேட்
கடந்த டிசம்பர் 30ம் தேதி தன் தாயாரைப் பார்க்க ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்த போது, ரிஷப் பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் ரிஷப் குறித்து பேசுகையில், விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கார் விபத்திலிருந்து மீண்டு வருவதால், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடமாட்டார்.
மேலும், ரிஷப் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். நான் டெல்லி கேபிடல்ஸ் உடன் தொடர்பில் இருக்கிறேன். இது ஒரு சிறந்த ஐபிஎல் (அணிக்கு), நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். ரிஷப் தசைநார் காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், மேலும், அவர் குணமடைய 4 மாதங்களாகும் என்றார்.