ரிஷப் பண்ட் விளையாட வேண்டாம்... - ரிக்கி பாண்டிங் பேட்டி - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!

Rishabh Pant Accident
By Nandhini Jan 22, 2023 07:50 AM GMT
Report

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தன் தாயாரைப் பார்க்க ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்த போது, 24 வயதாகும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் ​​பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பிற்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால் தசைநார் கிழிந்த இரு பகுதியை சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்னொரு தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.

பறிபோன வாய்ப்புகள்

இதனையடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடமாட்டார் என்றும், ரிஷப் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கார் விபத்தால் ரிஷப், அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

rishabh-pant-car-accident-ricky-ponting-cricketer

ரிஷப் பண்ட் விளையாட வேண்டாம்

ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாட வேண்டாம், என் அருகில் அமர்ந்து இருந்தாலே போதும் என நினைக்கிறேன் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்டுக்கு மாற்று வீரர் கண்டுபிடிக்க முடியாது. கடந்த முறை அவர் ஆஸ்திரேலிய வந்தபோது, என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியும்? அவர இல்லாதது இந்திய அணிக்கு இழப்புத்தான். ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வேண்டாம். என்னுடன் இருந்தாலே போதும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.  

தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரிஷப்பின் ரசிகர்கள் ரிக்கி பாண்டிங்கை பாராட்டி வருகின்றனர்.