பந்துகளை சிதற அடித்து..வீரர்களை திணறடித்து..சாதனை படைத்த ரிஷப் பண்ட்..!

RishabhPant INDVsSL SLVsIND RishabhPantNewRecord RishabhPantBreakKabilDev
By Thahir Mar 13, 2022 05:43 PM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது நாள் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் முன்னாள் இந்திய அணி வீரர் கபில் தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் அரை சதம் வீசினார்.

பந்துகளை சிதற அடித்து..வீரர்களை திணறடித்து..சாதனை படைத்த ரிஷப் பண்ட்..! | Rishabh Pant Breaks Kapil Dev S Record

முதல் இன்னிங்சில் 252 ரன்களும்,இலங்கை அணி 109 ரன்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிவேகமாக ஆடி அரைசதம் அடித்தார். 28 பந்துகளில் 7 பவுண்டரிகள்,2 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் கபில் தேவின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக ஆடி அரை சதம் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றிருந்தார்.

1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கபில் தேவ் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

தற்போது அவரின் சாதனையை முறியடித்துள்ள ரிஷப் பண்ட் அதை விட குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.அவருக்கு கிரிக்கெட் ரசிகர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.