ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட் - என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

Rishabh Pant Indian Cricket Team South Africa National Cricket Team
By Sumathi Nov 27, 2025 02:13 PM GMT
Report

ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியா தோல்வி

கவுகாத்தியில் நடந்த இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

IND vs SA

டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது. சுப்மன் கில் காயம் காரணமாக விலகிய நிலையில், பொறுப்பு கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார். இந்நிலையில், சொந்த மண்ணில் இந்திய அணியின் படுதோல்விக்காக ரிஷப் பண்ட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ''கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான அளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு அணியாகவும், தனிநபர்களாகவும், நாங்கள் எப்போதும் உயர் மட்டத்தில் செயல்பட்டு கோடிக்கணக்கான

ஸ்மிருதி மந்தனாவை வருங்கால கணவர் ஏமாற்றினாரா? இன்ஸ்டாவில் பதிவுகள் நீக்கம்!

ஸ்மிருதி மந்தனாவை வருங்கால கணவர் ஏமாற்றினாரா? இன்ஸ்டாவில் பதிவுகள் நீக்கம்!

ரிஷப் மன்னிப்பு

இந்தியர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்க விரும்புகிறோம். இந்த முறை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததற்கு மன்னிக்கவும். ஆனால், விளையாட்டு என்பது ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும் கற்றுக்கொள்ள, மாற்றியமைக்க மற்றும் வளர கற்றுக்கொடுக்கிறது.

Rishab pant

இந்தியாவுக்காக விளையாடுவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை. இந்த அணிக்கு என்ன திறன் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் கடினமாக உழைத்து, மீண்டும் ஒன்றிணைந்து, கவனம் செலுத்தி,

ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும் வலுவாக மீண்டு வருவோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி! ஜெய் ஹிந்த்'' என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.