தென்னாப்பிரிக்க வீரரை வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் - என்ன சண்டை தெரியுமா?
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க வீரரை வெளுத்து வாங்கிய சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
இதனிடையே இந்த போட்டியின் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்க வீரர் வான் டெர் டூஸனை கடுமையாக சாடிப் பேசினார்.தற்போது இந்த ஆடியோ மைக்கில் பதிவாகி வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 38ஆவது ஓவரின் போது பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்த ரிஷப் பண்ட் காதுகளில் வான் டெர் டூஸன் முணுமுணுத்துக் பேசியிருக்கிறார்.
இதனைக்கேட்ட ரிஷப் பண்ட் கடுப்பாகி உனக்கு அரைகுறை அறிவு மட்டும் இருந்தால் வாயை மூடிக்கொண்டு இருப்பது நலம் என்று கூறுகிறார். கேட்ச் பிடித்தது தொடர்பாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
— Maqbool (@im_maqbool) January 5, 2022