கேப்டன் விராட் கோலி - ராகுல் டிராவிட் இடையே வெடித்த பிரச்சனை - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக டிராவிட் மற்றும் கோலிக்கு இடையே ஈகோ மோதல் எழுந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் எல்கர் (3 ரன்கள்) விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18 ரன்கள் எடுத்துள்ளது.
இதனிடையே இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக டிராவிட் மற்றும் கோலிக்கு இடையே ஈகோ மோதல் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேப்டவுன் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை விரைவில் பறிகொடுப்பார்கள்.இதனால், அனுபவமும், ஃபார்மில் உள்ள விருத்திமான் சாஹாவை அணியில் சேர்க்க டிராவிட் குரல் கொடுத்தார்.
டிராவிட்டின் இந்த யோசனையை புறந்தள்ளிய விராட் கோலி, தலைக் கீழாக தான் குதிப்பேன் என்று கூறி கடந்த 14 இன்னிங்சில் ஒரு முறை தான் அரைசதம் அடித்த ரிஷப் பண்டை மீண்டும் தேர்வு செய்தார்.
ஜோகனஸ்பர்க் டெஸ்டில் மோசமான ஷாட் ஆடி டக் அவுட்டான ரிஷப் பண்ட் இம்முறை அரைசதமோ இல்லை சதமோ அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தால் போல் ரிஷப் பண்ட் பொறுமையாக விளையாடி விராட் கோலியுடன் 50 ரன்கள் பார்டனர்ஷிப்பை சேர்த்தார்.
ஆனால் 50 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், மார்கோ ஜென்சன் வீசிய பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்தனர்.