பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் மரணம் : சோகத்தில் திரையுலகம்

Death
By Irumporai Feb 05, 2023 02:57 AM GMT
Report

பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

டி.பி.கஜேந்திரன்

 தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு விசு மற்றும் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான வீடு மனைவ மக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் டிபி கஜேந்திரன். தொடர்ந்து, எங்க ஊரு காவல்காரன், தாயா தாரமா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன் சீனா தானா உள்ளிட்ட பல படங்ளை இயக்கியுள்ளார்.

முதலமைச்சரின் தோழர்

கடைசியாக மகனே என் மருமகனே என்ற படத்தை இயக்கியிருந்தார் மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான் பாலச்சந்தர், விசு ராம நாராயணன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் சுமார் 60-க்கு மேற்பட்ட படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள டிபி கஜேந்திரன்

பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவுகாரணமாக இருந்த கஜேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் மரணம் : சோகத்தில் திரையுலகம் | Riptp Gajendran Death Tamil Cinema

மு.க.ஸ்டாலினும், டிபி கஜேந்திரனும், விவேகானந்தா கல்லூரியில் பியூசி ஒன்றாக படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் மரணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.