ட்விட்டருக்கு டாட்டா.. ட்ரெண்டாகும் #RIPTwitter : காரணம் என்ன?
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிவுடனே சர்ச்சைகளும் வரத் தொடங்கின, மேலும் பல ஊழியர்களும் ட்விட்டரை விட்டு வரத்தொடங்கினர்.
ப்ளூடிக்கிற்கு கட்டணம் என இவரது செயல்பாடுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.
எலான் மஸ்க் ட்விட்டர்
மேலும், ப்ளூடிக்கிற்கு கட்டணம் என இவரது செயல்பாடுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.எலான் மஸ்க் நீக்கிய பணியாளர்கள் தவிர மேலும் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை விட்டு நீங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ட்விட்டர் தலைமை அலுவலகத்தை எலான் மஸ்க் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்ரெண்டிங்கில் RIPTwitter
எலான் மஸ்க்கை எதிர்த்து மேலும் பல பயனாளர்களும் ட்விட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர். வெளியேறும் முன்னர் அவர்கள் #RIPTwitter, #GoodByeTwitter, #TwitterDown போன்ற ஹேஷ்டேகுகளை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
NGL I love twitter employees ??? they roasting this fool #RIPTwitter pic.twitter.com/nOEuSxtHcv
— ???☯️ter? (@IanScottie4) November 18, 2022
மேலும் ட்விட்டர் தலைமை அலுவலக முன்பக்கத்தில் எலான் மஸ்க்கை விமர்சித்து ஸ்க்ரோலிங் ஒன்றை ஒருவர் ஒளிபரப்பிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.