இளம் எம்.பியை கரம் பிடிக்கும் ரிங்கு சிங் - யார் இந்த பிரியா சரோஜ்?
சமாஜ்வாடி கட்சி எம்பி பிரியா சரோஜை கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிங்கு சிங்
உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் பிறந்த ரிங்கு சிங் கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான T20 போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி பிரபலமானவர். இதனால் கொல்கத்தா அணி ஏலத்திற்கு முன்பாகவே அவரை ரூ,.13 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
பிரியா சரோஜ்
இந்நிலையில், ரிங்கு சிங்கிற்கும் சமாஜ்வாடி கட்சி பிரியா சரோஜிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள பிரியா சரோஜின் தந்தை துஃபானி சரோஜ், நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
பிரியா சரோஜின் தந்தை துஃபானி சரோஜ் சமாஜ்வாடி கட்சி சார்பில் 3 முறை எம்.பியாக தேர்ந்தேடுக்கப்பட்டவர். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பிரியா சரோஜ் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மச்லிசாகர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 26 வயதில் எம்பி ஆனதன் மூலம் இந்தியாவின் இள வயது எம்பிக்களில் ஒருவராக மாறியுள்ளார்.
மிக ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் ரிங்கு சிங். அவரது தந்தை இப்போதும் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில்தான் ரிங்கு சிங் தனது குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை கட்டியுள்ளார்.