T20 உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்து சாதனை படைத்தார் ரிலீ ரோசவ் - குவியும் வாழ்த்து
T20 உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ரிலீ ரோசவ்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
ரிலீ ரோசவ் சாதனை
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிலீ ரோசவ் சதத்தால் தென்னாப்பிரிக்க அணி அமோக வெற்றியடைந்தது. இதனையடுத்து, 2-வது ஆட்டத்தில் ஆடிய தென்னாப்பிரிக்கா தன்னுடைய முதல் வெற்றியை பதியவைத்தது.
109 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் தன் முந்தைய இன்னிங்சில் இந்தூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 100 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் சர்வதேச T20 உலக கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு பிரான்ஸ் வீரர் கஸ்டவ் மெக்யோன் அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.