வெற்றியுடன் ஓய்வு : சிஎஸ்கே கேப்டன் தோனி மறைமுகமாய் கூறிய பதில் என்ன?

MS Dhoni IPL 2023
By Irumporai May 30, 2023 03:14 AM GMT
Report

ஓய்வு அறிவிக்க சரியான நேரம் தான். இன்னும் 9 மாதங்கள் பயிற்சிக்கு பின்னர் முடிவு எடுக்க உள்ளேன் என சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

 சி.எஸ்.கே வெற்றி

நேற்று, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி தற்போது சமன் செய்துள்ளது.

 வெற்றியுடன் ஓய்வு

இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போதிலிருந்தே இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என பலரும் கூறிவந்த நிலையில், இதற்கு தோனி பதில் ஏதும் கூறாமல் இந்த கேள்வியை தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். நேற்று இறுதிப்போட்டி முடிந்து சாம்பியன் பட்டம் வென்றவுடன் மீண்டும் அவரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய மகேந்திர சிங் தோனி, ஓய்வினை அறிவிக்க இது சிறந்த தருணம் தான். நான் ரசிகர்களிடம் பெற்று அன்பு அளவுக்கு அதிகமானது அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்.

வெற்றியுடன் ஓய்வு : சிஎஸ்கே கேப்டன் தோனி மறைமுகமாய் கூறிய பதில் என்ன? | Right Time To Declare Retirement Captain Dhoni

இன்னும் ஒன்பது மாதங்கள் பயிற்சி மேற்கொண்டு, அதன் பின்னர் எனது உடல் ஒத்துழைக்குமா என ஆராய்ந்து, அதன் பிறகு முடிவு எடுத்தால் நன்றாக இருக்கும் என தனது ஓய்வு குறித்து தற்போது விடையளிக்காமல் இன்னும் 9 மாதங்கள் கழித்து கூறுவதாக சென்று விட்டார் மகேந்திர சிங் தோனி. ஏற்கனவே தோனி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் அதிகமாக ஓடி ரன் எடுக்க முடியாமல் இருந்ததை நாம் பார்க்க முடிந்தது.

மேலும், அவரே, ஒரு பேட்டியில் தன்னை அதிகம் ஓட வைக்காதீர்கள். நான் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்கிறேன் என தனது அணி வீரர்களிடம் மறைமுகமாக தனது உடல்நிலை குறித்து கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிகபட்சமாக இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.