"பிரபாகரனை கொன்றதற்கு மிகப்பெரிய தண்டனை இது..தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்" - விஜயகாந்த்

Mahinda Rajapaksa Vijayakanth Sri Lanka
By Swetha Subash May 10, 2022 09:21 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

"பிரபாகரனை கொன்றதற்கு மிகப்பெரிய தண்டனை இது..தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்" - விஜயகாந்த் | Right Punishment To Rajapaksa Says Vijayakanth

இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். பிரதமர் பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது.

இந்த வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்,நேற்று நடந்த வன்முறையில் 30க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், தற்போது ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து,அத்தனை மக்களையும் கொலை,கொள்ளை பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை இது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைக்கு தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.