நான் திரும்பவும் வருவேன்’ - டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.!

trump usa biden
By Jon Mar 02, 2021 12:24 PM GMT
Report

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் மிக நீண்ட போராட்டத்திற்கு ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார். அதற்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் பல நாட்கள் தலைமறைவாகவே இருந்து வந்தார். அமெரிகக் நாடாளுமன்ற வன்முறை தொடர்பான வழக்குகள் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் 2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் எனச் சொல்லப்பட்டு வந்தது. மேலும் குடியரசு கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த தகவலை டொனால்ட் ட்ரம்ப்பே உறுதிபடுத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு புளோரிடா மாகாணத்தின், ஓர்லாண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் ட்ரம்ப்.

அதில், “புதிய அரசியல் கட்சியை தொடங்க எந்த திட்டமும் இல்லை என்றும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல்கள் போலியானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பைடன் அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டதாகவும், 2024 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும், 2024 ஜனநாயக கட்சியினரை மூன்றாவது முறையாக தோற்கடிப்பதற்கான வாய்ப்பு அடுத்த தேர்தலில் ஏற்படலாம்” என்றார்.