விஜய்யால் குடும்பத்திற்குள் சண்டையா? நெத்தியடி பதில் கொடுத்த திவ்யா சத்யராஜ்

Sathyaraj Sibi Sathyaraj Vijay Tamil nadu TVK
By Vinoja Apr 03, 2026 09:29 AM GMT
Report

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜய் கட்சிக்கும், மகள் திவ்யா திமுகவுக்கும் ஆதரவு கொடுப்பதால் சத்யராஜ் குடும்பத்தில் பிரச்சனையோ என்ற கருத்து பரவலாக இருந்துவந்த நிலையில், நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணரும் பிரபல நடிகர் சத்யராஜின் மகளுமான  திவ்யா சத்யராஜ் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளராக செயல்பட்டுவரும் இவர், திமுகவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், அவ்வப்போது தவெக தலைவர் விஜய்யையும விமர்சித்து வருகின்றார்.

விஜய்யால் குடும்பத்திற்குள் சண்டையா? நெத்தியடி பதில் கொடுத்த திவ்யா சத்யராஜ் | Rift In Our Family Divya Sathyaraj Open Talk

குறிப்பாக அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்களுக்காக என்ன செய்தீர்கள் சார் என்று விஜய்யிடம் திவ்யா சத்யராஜ்  கேள்வியெழுப்பி்யமைக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கொந்தளித்த நிலையில, அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் திவ்யாவின் அண்ணன் சிபி சத்யராஜ்.

அதனால் இப்படி சொந்த தங்கையையே அசிங்கப்படுத்தலாமா? தங்கையை விட விஜய் முக்கியமா என்பது போன்ற கருத்துக்கள் இணையத்தில் வலுப்பெற்ற நிலையில், விஜய்யால் சத்யராஜின் குடும்பத்த்துக்கு பிரச்சினை என்ற கருத்து பரவலாக இருந்து வருகின்றது.

விஜய்யால் குடும்பத்திற்குள் சண்டையா? நெத்தியடி பதில் கொடுத்த திவ்யா சத்யராஜ் | Rift In Our Family Divya Sathyaraj Open Talk

திவ்யா சத்யராஜ் பதில்

இந்நிலையில் ரசிகர்களின் இந்த கருத்து தொடர்பில் திவ்யா சத்யராஜிடமே கேட்கப்பட்ட போது, திவ்யா சத்யராஜ் கூறியதாவது, எனக்கு முக்கியமான இரண்டு பேர் சத்யராஜ், சிபிராஜ்.

என் அப்பாவும், அண்ணனும் தான் என் உலகம். நாங்கள் முற்போக்கான குடும்பம். என் அண்ணுக்கு ஊதா கலர் பிடிக்கும். எனக்கு பிங்க் பிடிக்கும். அவருக்கு ஊதா பிடிக்கும் என்பதால் எனக்கும் அதே நிறம் தான் பிடிக்கணும் என்று இல்லையே. எங்கள் குடும்பத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை என பதிலளித்துள்ளார்.