ஐபிஎல் போட்டியின் போது நடுவரிடம் சண்டை போட்ட ரிக்கி பாண்டிங் - இப்படியா நடக்கணும்...!
ஐபிஎல் போட்டியின் போது டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிப்பாண்டிங் கடும் ஆவேசத்துடன் நடுவருடன் சண்டைப் போட்ட வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை குவித்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 61, ப்ரித்வி ஷா 51 ரன்கள் குவித்தனர்.
தொடர்ந்து பேட் செய்த கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம் டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே டெல்லி அணி பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 19வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். கடைசி நேர ரன் குவிப்பிற்காக ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்தார்.
அப்போது ஆஃப் சைட் திசையில் வைட் லைனில் யார்க்கர் பந்து போடப்பட்டது. இது கிறீஸையும் தாண்டி சென்றதாக கூறப்படும் நிலையில் நடுவர்கள் வைட் கொடுக்காமல் சரியான பந்து எனக் கூறினர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிப்பாண்டிங் 4வது நடுவரிடம் மிகவும் ஆவேசமாக கத்தினார்.
இவ்வளவு வைடாக செல்லும் பந்துக்கு சரி எனக் கூறுகிறீர்கள்? நியாயமே இல்லை என கத்திய வீடியோ இணையத்தில் வெளியானது. மிகவும் அமைதியான பயிற்சியாளரா இப்படி செய்தது என அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
#RickyPonting fighting with umpire pic.twitter.com/3jPYobJZAe
— Raj (@Raj93465898) April 10, 2022