பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட்ஸ் - எதற்கு தெரியுமா?
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜிம்மி ஆடம்ஸ் ஆகியோர் கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர், விவியன் ரிச்சர்ட்ஸ் வெளியிட்டுள்ள ஒரு 'வீடியோ'வில் பேசுகையில், எங்கள் நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, ஆன்டிகுவா மற்றும் பர்புடா மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும், இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜிம்மி ஆடம்ஸ் ஆகியோரும் 'வீடியோ' வாயிலாக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.