வாய்ப்புக்காக தான்..பணத்துக்காக இல்லை!! Adjustment குறித்து உண்மையை சொன்ன ரிச்சா!!

Tamil Actress
By Karthick Oct 14, 2023 05:02 PM GMT
Report

சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.

ரிச்சா கங்கோபாத்யாய்

வடநாட்டு நடிகைகளுக்கு தென்னிந்தியாவில் மவுசு இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். தெலுங்கில் 2010-ஆம் ஆண்டு வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்நது அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நாயகியாக முன்னேறினார்.

வாய்ப்புக்காக தான்..பணத்துக்காக இல்லை!! Adjustment குறித்து உண்மையை சொன்ன ரிச்சா!! | Richa Gangopadhyay About Her Adjustment Incident

அதே நேரத்தில் தமிழில் சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷுடன் மயக்கம் என்ன போன்ற படங்களிலும் நடித்தும் தமிழ்த்திலும் பிரபலமான இவர் திடீரென நடிப்பை நிறுத்தி கொண்டு படித்த படிப்பிற்கான வேலையை செய்யப்போவதாக முற்றிலுமாக சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில் தனது திரைத்துறை அனுபவங்களை பகிர்நது கொண்டுள்ளார். அதில், சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்தத அதே நேரத்தில் தனக்கு சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது என்றார்.

அதுக்காக அப்படி நடித்தேன்

வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் எம்பிஏ படித்து இருப்பதாக குறிப்பிட்ட ரிச்சா, தொழிலில் சாதிக்க வேண்டும் என்று பல ஆசை இருந்தது, சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்துவிடலாம் இருப்பினும், தனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது விரும்பம் இல்லை என்று கூறினார்.

வாய்ப்புக்காக தான்..பணத்துக்காக இல்லை!! Adjustment குறித்து உண்மையை சொன்ன ரிச்சா!! | Richa Gangopadhyay About Her Adjustment Incident

தொடர்ந்து அவரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்த கேள்வியை பெண்ணிடம் கேட்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்றும் நீங்கள் கேட்கிறீர்கள் என குறிப்பிட்டு, தன்னை படவாய்ப்பு தருவதாக யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று தெரிவித்த ரிச்சா, கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே அழைத்தார்கள் என்றார்.

வாய்ப்புக்காக தான்..பணத்துக்காக இல்லை!! Adjustment குறித்து உண்மையை சொன்ன ரிச்சா!! | Richa Gangopadhyay About Her Adjustment Incident

படவாய்ப்பு மற்றும் ரசிகர்களுக்காக மட்டுமே தான் கவர்ச்சியாக நடித்ததாக கூறிய ரிச்சா, கவர்ச்சி ஆடை அணிந்து சொல்லும் போது, இந்த காட்சிக்கு இது தேவையா என்று கேட்டால் வேறு உடை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சிலர் கூறியிருக்கிறார்கள் என்றும் பகிர்ந்துகொண்டுள்ளார். இது போன்ற சூழல்களை தான் சில சங்கடங்களை எதிர்கொண்டதாக தெரிவித்து ஆனால் யாரும் தவறான நோக்கத்துடன் பேசவில்லை என கூறி, தான் யாரிடமும் நெருக்கமாக பழகமாட்டேன் என்று தெரிவித்தார்.