மீண்டும் ரிப்பன் மாளிகையினை அலங்கரிக்க போகும் தமிழ் பலகை

tamil chennai dmk
By Irumporai Jun 02, 2021 01:10 PM GMT
Report

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மேல்தளத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர் பதாகை  மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் இருந்த தமிழ் வாழ்க வ்என்ற பெயர்ப்பலகை நீக்கப்பட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை எழுந்தது.

சீரமைப்பு பணிகளின் போது அந்த பெயர் பலகை பழுதடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததால் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிப்பன் மாளிகை மறு சீரமைப்பு பணியில் உள்ளதால்  தமிழ் வாழ்க  என்ற பெயர் பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

நாளை கருணாநிதி பிறந்த நாளன்று அந்தப் பெயர் பலகை திறக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.