பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல பிரபல நடிகைக்கு வாரத்திற்கு ரூ. 35 லட்சமா?

biggboss15 rheachakraborty
By Petchi Avudaiappan Sep 29, 2021 06:34 PM GMT
Report

 இந்தியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 15 நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கவிருக்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ.350 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல் திரையுலகை அதிர செய்துள்ளது.

இதனிடையே பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி பிக்பாஸ் 15 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வாரத்திற்கு ரூ. 35 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலி தான் ரியா சக்ரபர்த்தி என்பதும், பிக்பாஸ் போட்டியாளருக்கு இவ்வளவு அதிக சம்பளம் கொடுப்பது இது தான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.