பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு - குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடந்த 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டார். மேலும் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவர்களிடம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டது.
இந்த படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போராட்டம் வாப்ஸ் பெறப்பட்டது. மிண்டும் தற்பொழுது மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குற்றப்பத்திரிகை
இதனிடையே, பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்த நிலையில் சிபிஐ இப்போது இந்த கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை சம்பவம் தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயிற்சி மருத்துவர் செமினார் ஹாலுக்கு தூங்கச் சென்றபோது இந்த கொடூரத்தை சஞ்சய் ராய் செய்துள்ளார். பயிற்சி மருத்துவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இதில் பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் கூட்டுப் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்றும் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தைச் செய்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.