இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப குறைபாடு : கண்டுபிடித்த நபருக்கு ரூ.22 லட்சம் பரிசு

Instagram bug
By Petchi Avudaiappan Jun 18, 2021 10:34 AM GMT
Report

சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் உள்ள தொழில்நுட்ப குறைபாடு கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப குறைபாடு : கண்டுபிடித்த நபருக்கு ரூ.22 லட்சம் பரிசு | Rewards Rs 22 Lakh For Instagram Bug

கடந்த மாதம் இதில் பங்கேற்ற மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர் இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட அதிலுள்ள ஒரு பிழை யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், கதைகள், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என்ற தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்தார்.

இதனை கடந்த ஜூன் 15 ஆம் தேதி பேஸ்புக் நிர்வாகம் சரிசெய்தது.அதனை கண்டுபிடித்த மாணவர் மயூருக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.