காணாமல் போனவரை கண்டுபிடித்தால் கோடீஸ்வரர் ஆகலாம் - குடும்பத்தினர் அறிவிப்பு

Saudi Arabia
By Thahir Aug 29, 2022 09:40 AM GMT
Report

சவுதி அரேபியாவில் காணாமல் போன தொழிலதிபரை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் ரியால்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 2 கோடி ) வழங்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடித்தால் கோடீஸ்வரர் ஆகலாம் 

சவுதி அரோபியாவில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி அல் ஷுமைசி மருத்துவமனை வளாகத்தில் இருந்து மர்மமான முறையில் துர்கி அல் தோசாரி என்பவர் காணாமல் போனார்.

இந்த நிலையில் தனது சகோதரரைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் ரியால்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,12,84,958 ) சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

காணாமல் போனவரை கண்டுபிடித்தால் கோடீஸ்வரர் ஆகலாம்  - குடும்பத்தினர் அறிவிப்பு | Reward Of Rs 2 Crore If The Missing Person Found

தனது சகோதரனைக் கண்டுபிடிக்க உதவுமாறு நாட்டில் உள்ள அனைவருக்கும் பைசல் தோசாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் தெரிந்தவர்கள் 0555556592 மற்றும் 0555101850 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.