5 கொசுக்களை பிடித்துக் கொடுத்தால் பரிசு தொகை.. படையெடுக்கும் கூட்டம் -எங்கு தெரியுமா?
5 கொசுக்களைப் பிடித்துக் கொடுத்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என நாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொசு
பிலிப்பைன்ஸ் உள்ள மண்டலியோங் மாகாணத்தில் அடிஷன் மலைக் கிராமம் உள்ளது. இங்கு 100,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் 28,234 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டெங்கு பாதித்த 2 மாணவர்கள் உள்பட 10 பேர் இறந்தது அந்நாட்டைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். இந்நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கிராமத் தலைவர் கார்லிட்டோ செர்னல், ஒரு நூதன முயற்சியை முன்னெடுத்தார்.
பரிசுத் தொகை
அதாவது, 5 கொசுக்களை, உயிருடனோ, கொல்லப்பட்ட நிலையிலோ பிடித்துக் கொடுத்தால், இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய் 50 காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், உற்சாகம் அடைந்த கிராம மக்கள், கொத்துக் கொத்தாகக் கொசுக்களைப் பிடித்துக் கொண்டு, பணம் பெறுவதற்குப் படையெடுக்கத் தொடங்கினர்.
ஆனால் இந்த அறிவிப்பால் பெரிய சிக்கல் ஒன்றும் உருவாகியுள்ளது.கிமார மக்கள் சிலர் பணத் தேவைக்காக வீட்டிலேயே கொசுவை வளர்த்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க Manithan
