போராட்டக்களத்தில் முளைத்த புரட்சி பூ! சர்வாதிகாரியினை நடுங்க வைத்த பேரழகி யார் தெரியுமா?
தினமும் துப்பாக்கி சூடு தாக்குதல்,சொந்த நாட்டு மக்கள் மீதே ஏவுகணை தாக்குதல்,எறும்புகள் போல வெளியேறும் அகதிகள் என போராட்ட காலமாக மாறியுள்ளது மியான்மர். ((ஆதாரம்: பிபிசி, ஒன் இந்தியாதமிழ்)) மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சி தற்போது அமலில்உள்ளது.
அங்கு ராணுவம் ஆட்சி நடப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டைவிட்டு அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும், பூடானுக்கும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.
ஆனால் தேர்தல் முடிவு வெளியான சில நிமிடத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் அங்கு ஆட்சியை கைப்பற்றினார். தேர்தல் முடிவு ஒழுங்காக இல்லை ஆகவே ராணுவ ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார்.அன்று முதல் மியான்மரில் உள்நாட்டு மக்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ராணுவ ஆட்சிக்கு துணையாக ரஷ்யா, சீனா துணைபுரிய ராணுவ தளபதி மின் ஆங்கிற்கு கூடுதல் பலம் வந்துவிட்டது. இவரின் சர்வாதிகாரத்தை உலக நாடுகள் கண்டணம் எதுவும் மாறவில்லை. கிட்டதிட்ட ஹிட்லர் பாணியில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் மின் ஆங் ஒரே ஒரு விஷயத்தை எதிர்கொள்ள முடியாமல் நடுங்கி போய் உள்ளார்.
அவர் மட்டும் அல்ல உலகின் எல்லா சர்வாதிகாரிகளும் தான் ஆம் அவர்கள் பயந்து நடுங்க காரணம் ஒருபெண் புரட்சி! மியான்மரில் நடக்கும் அட்டூழியங்களை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வேலையை சத்தமாக செய்துள்ளார் 22 வயது ஹான் லே என்ற பேரழகி.
ஆம் ,உண்மையில் பேரழகிதான். மியான்மர் ராணுவத்தை நடுங்க வைத்து இருக்கும் ஹான் லே கடந்த வருடம்தான் மிஸ் மியான்மர் கிராண்ட் என்னும் மியான்மர் நாட்டுக்கான தேசிய அழகி விருதை தாய்லாந்தில் வென்றார். தேசிய விருது அழகி விருது பெற்ற ஹான் லே.. தன் அழகை பற்றி பேசிவிட்டு சென்றுவிடுவார் என்றுதான் மேடையில் இருந்த எல்லோரும் நினைத்தனர்.
ஆனால் ஹான் லேவோ. மியான்மர் ராணுவத்தை மேடையிலேயே விமர்சித்தார். ராணுவம் ஆட்சியை பிடிக்கும் முன்பே ராணுவம் செய்யும் அட்டூழியங்களை பட்டியலிட்டு மேடையில் பேசினார்..எங்கள் நாடு ஆபத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.. உலக நாடுகள் எங்களை திரும்பி பார்க்க வேண்டும்.. இல்லையென்றால் மியான்மர் மக்கள் இனமே அழிந்துவிடும், என்று மேடையிலேயே குறிப்பிட்டார்.
மியான்மர் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே பூசல் எழும் நிலையில் ஹான் லே பேச்சு அங்கு கவனிக்கப்பட்டது, ஆனால் தனது குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டுதான் ஹான் லே தாய்லாந்து சென்றார். இனி மியான்மர் திரும்ப முடியாது என்று அவருக்கு தெரியும். தாய்லாந்தில் ஹான் லே எப்போது மியான்மர் அரசுக்கு எதிராக பேசினாரா அப்போதில் இருந்து அவர் ராணுவத்தால் தேடப்பட்டு வருகிறார்.
தேடல் இவர் மீது தேச துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மியான்மர் ராணுவம் தேடி வருகிறது. "விட்ச் ஹன்ட்" போல இவரை பிடிப்பதற்காக உளவாளிகளை அனுப்பி உள்ளது, தனக்கு கிடைக்கிற சர்வதேச மேடைகளில் எல்லாம் மியான்மர் அவலங்களை வெளியே கொண்டு வருகிறார் ஹான் லே.
இவரின் பேச்சுதான் மியான்மர் ராணுவத்தை நடுங்க வைக்கிறது. மியான்மர் மக்களின் ஒரே நம்பிக்கையாக தற்போது இவர் உருவெடுத்துள்ளார். எப்படியாவது இவரை கைது செய்து கொன்றுவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் மியான்மர் ராணுவம் இருக்கிறது.
இவரின் கல்லூரி நண்பர்கள் இரண்டு பேரை ஏற்கனவே அந்நாட்டு ராணுவம் கொன்றுவிட்டது. இவரின் குடும்ப உறுப்பினர்களை ராணுவம் தேடி வருகிறது. இவரின் குடும்பத்தினர் மியான்மரில் இருந்தாலும், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. தாய்லாந்தில் இருந்து கொண்டு, மியான்மர் ராணுவத்தின் சர்வாதிகார கோட்டையினை தனது பரட்சி வார்த்தைகள் மூலமாக தகர்த்து வருகிறார் ஹான்லே.
தற்போது ஹான் லே பேசு பொருளாக முக்கியமான காரணம் மியான்மரில் நடக்கும் அவலங்களை தினமும் தனது உறவினர்கள் மூலமும், புரட்சியாளர்கள் மூலமும் தெரிந்து கொண்டு அதை சர்வதேச ஊடகங்களுக்கு ஹான் லே கொண்டு செல்கிறார். அதனால் தான் இந்த அந்நாட்டு சர்வாதிகாரம் இவரை பார்த்து நடுங்க காரணமாக உள்ளது .
எனக்கு தெரியும் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை . இனியும் அச்சப்படாமல் ராணுவ ஆட்சி முடியும் வரை பேசுவேன் என்று ஹான் லே பேட்டி அளித்துள்ளார். சர்வதேச அழுத்தம் தங்கள் நாட்டின் நம்பிக்கையாக ஹான் லேவை மியான்மர் மக்கள் பலர் பார்க்கிறார்கள். ஆங் சன் சுகியை பார்த்து ஏமாந்துவிட்டோம்.
ஆனால் ஹான் லே எங்களுக்காக தைரியமாக குரல் கொடுக்கிறார். எங்களுக்கு நம்பிக்கைஎன்று அந்நாட்டு மக்கள் அவரை கொண்டாட தொடங்கி உள்ளனர். ஹான் லே தாய்லாந்தில் அடிக்கடி இடம் மாறி, புதிய இடங்களில் தங்கி, மியான்மர் உளவாளிகள் கண்ணில் சிக்காமல், மியான்மர் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறாள் இந்த புரட்சி பூ மகள்.
போராட்டம் என்பது உனக்காக அல்ல..நாளைய உன் தலைமுறைக்கு என உணர்த்திடு இது பரட்சியாளர் சேகுவேராவின் வரிகள்
தற்போது மியான்மர் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒற்றை சக்தியாக உருவெடுத்து வருகிறார் ஹான் லே என்பதுதான் நிதர்சனமான உண்மை.