செல்போனை நோண்டிக் கொண்டிருந்தால் கைகொடுக்குமா?-அதிகாரியை கண்டித்த அமைச்சர் நேரு

Tamil nadu DMK K. N. Nehru
By Sumathi Jun 07, 2022 07:50 PM GMT
Report

ஆய்வுக் கூட்டத்தில் செல்போன் பார்த்தக் கொண்டிருந்த அதிகாரியை அமைச்சர் நேரு திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

 அமைச்சர் கே.என்.நேரு

நாமக்கல் நகராட்சி கூட்டரங்கில் நாமக்கல் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

செல்போனை நோண்டிக் கொண்டிருந்தால் கைகொடுக்குமா?-அதிகாரியை கண்டித்த அமைச்சர் நேரு | Review Meeting Nehru Reprimanded The Officer

இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எப்படி கூறும் அறிவுரை கேட்க முடியும்

அப்போது அமைச்சர் நேரு, நகராட்சியின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து வந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவர் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதைக்கண்ட அமைச்சர், இங்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தாங்கள் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தால் எப்படி கூறும் அறிவுரை கேட்க முடியும். செல்போன் இதற்காக கைகொடுக்குமா,

செல்போன் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என கடிந்து கொண்டார். இதனையடுத்து அந்த அதிகாரி தனது செல்போனை வைத்துவிட்டு கவனிக்கத் தொடங்கினார். இதனால் ஆய்வுக் கூடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.