விவாகரத்தை தொடர்ந்து தனுஷ் பற்றி வெளியான அடுத்த உண்மை - கண்கலங்கிய ரசிகர்கள்
நடிகர் தனுஷின் விவாகரத்து சம்பவத்தை தொடர்ந்து அவரைப் பற்றி வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.
இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இயல்பாகவே கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல மாட்டார் என்றும், என்ன பிரச்சனை வந்தாலும் அதை தன் அப்பா, அம்மாவிடம் கூட கூற மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தான் குடும்ப பிரச்சனை குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினாலே அதுபற்றி பொதுவெளியில் பேச விரும்ப மாட்டார் எனவும் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் சின்ன பிரச்சனை என்றாலும் ஊதி பெரிதாக்குபவர்கள் மத்தியில் தனுஷூக்கு இப்படிப்பட்ட நல்ல குணமா என ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.
You May Like This