பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்ட பிரபல நடிகை
தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இயக்குனர் முதல் இன்ஸ்பெக்டர் வரை 14 பேர்களின் பெயரை மலையாள நடிகை ரேவதி சம்பத் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தென்னிந்தியாவில் Metoo வின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் தொடங்கி பலபேர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் மலையாள நடிகையும், சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தனக்கு உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துன்புறுத்தியவர்கள் என 14 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில் இயக்குனர் ராஜேஷ் தொச்சிவர், நடிகர் சித்திக், ஒளிப்பதிவாளர் ஆஷிக் மஹி, நடிகர் சிஜூ கேரள பேஷன் லீக் நிறுவனர் அம்ஹில் தேவ், டாக்டர் அஜய் பிரபாகர், எம்.எஸ்.பதுஷ்,சவுரப் கிருஷ்ணன், நந்து அசோகன், குறும்பட இயக்குனர் மேக்ஸ்வெல் ஜோஸ், விளம்பரப்பட இயக்குனர் ஷனூப் கர்வத், காஸ்டிங் இயக்குனர் ரஹீந்த் பாய், வங்கி ஏஜென்ட் சருன் லியோ, இன்ஸ்பெக்டர் பினு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.