நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது தாக்குதல் - தெலுங்கானா முதலமைச்சர் கூறியது என்ன?
அல்லு அர்ஜூன் வீடு மீது தாக்குதல் நடத்தியதற்கு தெலுங்கானா முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன்
ஹைதராபாத்தில் கடந்த 4-ந்தேதி புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சந்தியா திரையரங்கத்துக்கு நடிகர் அல்லு அர்ஜூன்,நடிகை ராஷ்மிகா, இசையமைப்பாளர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் வந்த மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முளைசாவு அடைந்து உயிரிழந்தார். இந்த விவகாரம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்கள் கும்பலாக திரண்டு வந்து, பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது - அல்லு அர்ஜுனுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி!
முதலமைச்சர்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இது பற்றிய தகவலறிந்து வந்த தெலுங்கானா போலீசார், அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிகையில், "திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டி.ஜி.பி. மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது. சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்பில்லாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.