பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

DMK
By Irumporai Sep 27, 2022 04:25 AM GMT
Report

பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் ஓய்வு  60-ஆக நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக நீட்டிப்பு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 ஆக நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு | Retirement Age Of Teachers To 60

அதுவும் நடப்பு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில், தற்போது 60 என அறிவித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை தகவல்

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60-ஆக நீடிக்க வேண்டு என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதனை பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் தெரிவித்திருந்தது.

மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.