ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்

Chennai
By Thahir Oct 11, 2022 08:36 AM GMT
Report

தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி ஆர்ப்பாட்டம்.

ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் | Retired Power Workers Demonstrate Half Naked

சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகம் முன் ஏராளமானோர் சட்டையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை அவர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.